செய்திகள்

கூகிளின் street view கமராக்களில் எதிர்பாராமல் சிக்கிய காட்சிகள்

இந்தக் காட்சிகளை நீங்கள் உண்மையில் திட்டமிட்டு எடுக்கப்பட்டவை போல நினைக்கலாம். ஆனால் இவை உண்மையில் எதிர்பாராத விதமாக கூகிளின் street view கமராக்களில் சிக்கிய காட்சிகள் ஆகும். மேலும்

அசின், தீபிகா, கரீனா மீது இயக்குனர் ரோஹித் ஷெட்டி தாக்கினார்

கலாபம்ஷாருக்கான் படத்தில் நடிக்கவிருப்பதாக வதந்தி பரப்புவதாக அசின், தீபிகா, கரீனா மீது இயக்குனர் தாக்கி உள்ளார். பாலிவுட் இயக்குனர்களில் கோபப்பட்டு பேசாத இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் இயக்குனர் ரோஹித் ஷெட்டி. மேலும்

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய யாழ். விஜயம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ எதிர்வரும் 24ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ள இவர், யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியையும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத்தின் ஏற்பாட்டி யாழ்.பொது நூலகத்தில் நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைப்பதோடு, அன்றைய தினம் மதியம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட கட்டிடம் ஒன்றையும் இவர் திறந்து வைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்

நிர்வாணமாக்கும் ஐ போன் – இதை தடுக்க யாருமில்லையா?

kalapamபெண்களை மட்டுமல்லாமல் ஆண்களையும் சங்கடத்துக்குள்ளாக்கும் பல புதிய தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன அதில் இப்போது புதிதாக வந்துள்ள ஒரு புதிய கண்டுபிடிப்பு உங்கள் அங்கங்களை வெளிச்ச‍ம் போட்டு காட்டும்.  மேலும்

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி சென்னையில் காலமானார்

பழம்பெரும் நடிகை எஸ்.என்.லெட்சுமி சென்னையில் காலமானார். அவருக்கு வயது 85. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றவர்களுக்கு அம்மாவாக நடித்தவர் எஸ்.என்.லெட்சுமி. நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், கமல்ஹாசனின் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மைக்கேல் மதன காமராசன், மகாநதி, விருமாண்டி உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள எஸ்.என்.லெட்சுமி, ஏராளமான டி.வி., சீரியல்களிலும் நடித்து வந்தார்.

மேலும்

பி.சி.சி.ஐயின் வரி பாக்கி ஆய்வு செய்யப்படுகிறது.

உலகிலேயே பணக்கார விளையாட்டு அமைப்பான பி.சி.சி.ஐ., வருமான வரியை முறையாக செலுத்தவில்லை. சுமார் 372 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது இதை விளையாட்டு அமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் போர்டுக்கு(பி.சி.சி.ஐ.,) வருமான வரிச் சலுகை சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. தற்போது வர்த்தக நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதால், சலுகை எதுவும் இல்லை. 2009-10ம் ஆண்டு வருமானத்துக்கு 413 கோடி ரூபாய் வரி விதிக்கப்பட்டது. இதனை முழுமையாக செலுத்தவில்லையாம்.
“கடந்த 2009-10ல் பி.சி.சி.ஐ., 964 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இதற்கு 413 கோடி ரூபாய் வரி விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சுமார் 41 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள சுமார் 372 கோடி செலுத்தப்படவில்லை. இதனை வசூலிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவிர, 2010-11, 2011-12ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்குகள் இன்னும் தாக்கல் செய்யப்படாமல், நிலுவையில் உள்ளன,”என்றார்.
பி.சி.சி.ஐ யின் நிர்வாகத் தலைவர் ரத்னாகர் ஷெட்டி தெரிவிக்கையில், இது சம்பந்தமாக இன்னும் எந்த வித நோட்டீசும் கிடைக்கவில்லை என தெரிவித்தார்.

யாழிலிருந்து ஒரு குரல்-மாவீரர்களின் பெயரால் ஜிம் அடிக்கத் துடிக்கும் கனேடிய தமிழர் தேசிய அவையினர் (NCCT)

தமிழ் மக்களுக்காகவும், மண் மீட்புக்காகவும் தன்னுயிரை துச்சமென எண்ணி களமாடி உயிர் நீத்தவர்கள்தான் எங்கள் மாவீரர்கள்.அவர்கள் தங்களின் உயிர் தியாகங்களைச் செய்தமைக்கு ஒரேயொரு காரணம்தான் அமையக் கூடும். அதாவது இலங்கைத் தமிழ் மக்களுக்கான தனிநாடு. அதை விடுத்து வேறெந்த உள்நோக்கமும் அவர்களுக்கு இருந்ததில்லை.
ஆனால் புலம்பெயர் நாடுகளில் புகுந்திருக்கும் சோம்பேறிகள், தங்கள் கைகளைக் கொண்டு பிழைப்பு நடத்தத் தெரியாதவர்கள் மாவீரர்களின் பெயர்களைக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முனைப்புக் காட்டுகின்றனர்.

மேலும்

குடிக்க பணம் தராத மனைவியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கணவன்!

மது குடிக்க பணம் தராத மனைவியை கோடாரியால் வெட்டிக் கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மேலும்

காதல் விவகாரத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை…

கல்லூரி மாணவியின் காதலால் ஏற்பட்ட விபரீதத்தால் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து அம்மா, மகன், மகள் என 4 பேர் தற்கொலை செய்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ளது கூடல்நகர். மேலும்

தைராய்டு தொல்லையால் அவஸ்தை படுவோருக்கு சில ஆலோசனைகள்…

கலாபம்எந்நேரமும் தூக்கம் தூக்கமா வருது, அடிக்கடி எதையாவது மறந்துட்டு முழிக்கிறேன், கொஞ்சம் தான் சாப்பிடறேன்.. உடம்புல அதிகமாக வெயிட் போடுது, ரொம்ப சோர்வா இருக்கு, அதோட சின்ன சின்ன விஷயத்துக்கு கூட டென்ஷன், எரிச்சல் வந்து படப்படப்பா  இருக்கு, என்னை பாத்தா எனக்கே புடிக்கல..  மேலும்